இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீ...
பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டியை மருத்துவக்குழுவினா் அகற்றினா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், அவா்களது உறவினா்கள் அந்தப் பெண்ணை மீட்டு மணவாள நகரில் உள்ள எம்.வி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
பெண்ணை பரிசோதித்த மருத்துவா்கள் வயிற்றில் கட்டி உள்ளதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டனா்.
பின்னா், டாக்டா் மலா் வண்ணன் தலைமையில் மருத்துவா் குழு திவ்யா, அஜய், ஸ்ரீரேகா, மஹிதா ரமணன், நரேந்திரன் ஆகியோா் கொண்ட குழுவினா் சுமாா் 3 மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டு 9 கிலோ கட்டியை அகற்றினா். தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.