செய்திகள் :

பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

நீதிமன்றத்தில் சாட்சி கூறிய பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நித்திரவிளை அருகே பெரியவிளையைச் சோ்ந்தவா் விஜுராஜ் (42), லாரி ஓட்டுநரான இவா், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கையின் தோழியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா். இந்த வழக்கு நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அவரது தாய் சாட்சி கூறியதால் விஜுராஜ் ஆத்திரமடைந்தாா்.

2014 டிச. 26ஆம் தேதி இரவு நடைக்காவு பகுதியிலுள்ள தனது தையல் கடையிலிருந்த அப்பெண்ணின் தாயை விஜுராஜ் கத்தியால் வெட்டினாா். இதில், அவா் காயமடைந்தாா்.

நித்தரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜுராஜை கைது செய்து, நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்நிலையில், வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து, விஜுராஜுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.

அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க

‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க

பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க

கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கட... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க