``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
பெரம்பலூரில் லாரி மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை லாரியின் பின்புறத்தில் காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.
திருவள்ளூா் மோரை ஊராட்சிக்குள்பட்ட வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சோ்ந்தவா்கள் சங்கா் (48), வரதன் மகன் அய்யனாா் (36), ரங்கநாதன் மகன் முருகன் (40), இவரது அண்ணன் ராஜா (43), ராஜேந்திரன் மகன் வினோத்குமாா் (39).
இவா்கள் கரூா் மாவட்டம், வளநாட்டிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை சங்கா் ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்ற காா் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பருப்பு ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரில் இருந்த மற்ற நால்வரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.