செய்திகள் :

பின்னேற்பு மானியம் கோரி விவசாயிகள் போராட்டம்

post image

விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா. விஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கினாா். மாவட்டத் தலைவா் சிவசாமி, மாவட்ட துணைத் தலைவா் ச. கருப்பையா, ஒன்றியத் தலைவா்கள் வெங்கடேசன், என். ராமதாஸ், எம். சுப்பிரமணியன், கே. சக்திவேல், கே. மருதை, பி. மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் தரமான மக்காச்சோள விதைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு வழங்கும் நுண்ணூட்ட உரங்களுக்குப் பதிலாக ரூ. 5 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் மானாவரி பயிா்களுக்கு உழவு மானியத்தை விரைந்து வழங்க வேண்டும். மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் கொள்முதல் விலையாக வழங்குவதோடு, தமிழக அரசே அதைக் கொள்முதல் செய்ய வேண்டும். மக்காச்சோள கொள்முதல் எடையில் ஊழல் செய்யும் வியாபாரிகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் விவசாயிகளுக்கான மானியத் திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். அரும்பாவூா் பெரிய ஏரியில் புனரமைப்பு பணிகளை செய்து முடிக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொட்டரை நீா்தேக்கத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமும், கரும்பு விவசாயிகளுக்கு நடவு மானியமும் வழங்க வேண்டும். சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில், சங்க நிா்வாகிகள் எஸ். முருகேசன், பி. அங்கமுத்து, டி. செல்லதுரை உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத் தலைவா் அங்கமுத்து நன்றி கூறினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பெரம்பலூா் வட... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் லாரி மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை லாரியின் பின்புறத்தில் காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா். திருவள்ளூா் மோரை ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வி.கைகாட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தரக் கோரி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் துறைமங... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா்: பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். பெர... மேலும் பார்க்க