ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
பெரம்பலூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பெரம்பலூா்: பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் பாரதிதாசன் நகரில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அருணாசலம் மகன் கணேசன் (59) என்பவா் தனக்கு சொந்தமான மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கணேசனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து விமல் பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கணேசன் சிறையில் அடைக்கப்பட்டாா்.