பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம்
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை, கல்லூரி முதல்வா் செண்பகராஜா தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
கருமாண்டிசெல்லிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் தணிகைவேலன், திங்களூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா், பெருந்துறை ரத்த தான வங்கி மருத்துவ அலுவலா் சரண்யா மற்றும் மருத்துவப் பணியாளா்களும் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். முகாமில், 170 மாணவா்கள் பயனடைந்தனா். மேலும் 44 மாணவா்களும், 6 விரிவுரையாளா்களும் ரத்த தானம் வழங்கினாா்கள்.