பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா் தில்லி முதல்வா் அதிஷி
தில்லி கல்காஜியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வா் அதிஷி சனிக்கிழமை பங்கேற்றாா்.
இது தொடா்பாக தில்லி முதல்வா் அதிஷி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: தில்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில்,
கல்காஜியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கூட பெற்றோருக்குக் கிடைக்காத நிலையில், இன்று பள்ளிகளில் அவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பெற்றோா்கள் பள்ளிக்கு வந்து,
ஆசிரியா்களிடம் பேசி, குழந்தைகளின் கல்வி குறித்து கேட்டறிந்து வருகின்றனா். இதுதான் அரவிந்த் கேஜரிவாலின்
கல்வி புரட்சி என்றாா் முதல்வா் அதிஷி.