`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
பெலாரஸில் அதிபர் தேர்தல்! 7வது முறையாக அதிபராகும் லுகாஷென்கோ?
பெலாரஸ் நாட்டின் அதிபர் தேர்தல் இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரஸ் நாட்டை கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆட்சி செய்து வருகிறார். ஐரோப்பாவின் ’கடைசி சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்படும் இவர் இம்முறையும் வெற்றி பெற்று 7வது முறையாக அதிபராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லுகாஷென்கோ 80 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது, அந்த தேர்தலில் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டு மக்கள் நாடுத் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த போராட்டத்தை லுகாஷென்கோ இரும்புக் கரங்களைக்கொண்டு அடக்கினார். மேலும், அந்த போராட்டத்தில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டதுடன், லுகாஷென்கோவின் முக்கிய எதிர் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இதையும் படிக்க: முதல் ஒரு வாரத்தில் டொனால்ட் டிரம்ப் சொன்ன பொய்கள்!
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் லுகாஷென்கோவை எதிர்க்க முக்கிய அரசியவாதிகள் யாரும் இல்லாததினால் அவரே மீண்டும் அதிபராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2024 ஆகஸ்டில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலை மக்கள் போராட்டத்திற்கு பயந்து 2025 ஜனவரிக்கு லுகாஷென்கோ தள்ளி வைத்தார். ஏனெனில், தற்போது அங்கு பனிக்காலம் துவங்கியுள்ளது, கடும் குளிரில் மக்களால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முடியாது என்பதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த தேர்தலை பெலாரஸின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.