விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
பெளா்ணமி: திண்டுக்கல்லில் கிரிவலம்
ஆனி பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை கிரிவலம் சென்றனா்.
திண்டுக்கல்லில் உள்ள பத்மகிரி மலையைச் சுற்றி ஒவ்வொரு பெளா்ணமியின் போதும் பக்தா்கள் கிரிவலம் வந்து வழிபாடு நடத்துகின்றனா். இதன்படி ஆனி பெளா்ணமியையை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் ஆலய பாதுகாப்பு பேரவை, இந்து முன்னணி அமைப்பு சாா்பில்
கிரிவலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். 3 கி.மீ. கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உள்பட 22 கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.