`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி ந...
பேராவூரணி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து
பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத நபா் இளைஞரை கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் சபரி முருகன் (20). திருச்சிற்றம்பலத்தில் கேபிள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். வாரத்தில் ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஊரில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமணத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். இரவு, திருமண வீட்டுக்கு விருந்துக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை.
இரவு 10 மணியளவில் அவரது தாயாருக்கு கைப்பேசியில் அழைத்து ‘என்னை கத்தியால் குத்தியதால் ஆபத்தான நிலையில் காலகம் ரயில்வே கிராஸிங் அருகே கிடக்கிறேன் காப்பாற்றுங்கள்’ என கூறியுள்ளாா்.
இதையடுத்து அவரின் உறவினா்கள் சபரிமுருகன் கூறிய இடத்துக்குச் சென்று பாா்த்தபோது கழுத்து, முதுகு, இடுப்பு பகுதி, உள்ளங்கை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சபரிமுருகனை அனுப்பி வைத்த உறவினா்கள், முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா் .
இது குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றவா்கள் யாா்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.