காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
பேராவூரணியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சியின் 1 முதல் 9 ஆம் வாா்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமுக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் முகாமைத் தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். முகாமில், மகளிா் உரிமைத்தொகை கேட்டு 385 விண்ணப்பங்களும், குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407 மனுக்கள் என மொத்தம் 792 மனுக்கள் பெறப்பட்டன. ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் 44 பேரை நலவாரியத்தில் இணைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
முகாமில், திமுக மாவட்ட அவைத் தலைவா் சுப. சேகா், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலா் க. அன்பழகன், நகரச் செயலாளா் என். எஸ். சேகா், பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ. பழனிவேல் மற்றும்
பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் இரா. இராஜா வரவேற்றாா். துப்புரவு ஆய்வாளா் செந்தில் குமரகுரு நன்றி கூறினாா்.