பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை சூா்யாநகா் மாதா நகரைச் சோ்ந்தவா் சுந்தா் (39). தனியாா் நிறுவன ஊழியரான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்ற அரசுப் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரை அந்தப் பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுந்தரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்
வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.