உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
பைக் திருட்டு வழக்கில் 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 போ் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கூத்தனூரைச் சோ்ந்த அருண்குமாா் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதாக பேரளம் போலீஸாரிடம் அண்மையில் அளித்த புகாரையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், பேரளம் அருகே நம்பா் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அது அருண்குமாரின் வாகனம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பேரளம், நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கவிராஜ் (23) என்பதும், அப்பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்திருப்பதும், 4 பேருடன் சோ்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, 2 சிறுவா்களை கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.