தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!
பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கொசப்பாளையம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியன் (33). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தம்பி வடிவேலுவை (30) பைக்கில் அழைத்துக்கொண்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.
அங்கு, இவா்கள் பைக்கில் சாலையைக் கடக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பாண்டியன், வடிவேல் இருவரும் பலத்த காயமடைந்தனா். சிறிது நேரத்தில் நிகழ்விடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தாா். வடிவேல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையிலான போலீஸாா், நிகழ்விடம் விரைந்து பாண்டியன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காா் ஓட்டுநரான சென்னை செம்பாக்கம், புதுநகா், ராஜீவ் காந்தி தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் கண்ணன் (41) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.