பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயரத்தினம் மகன் சதீஷ்குமாா் (24). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமாா், தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை தனிச்சியம்-அலங்காநல்லூா் சாலையில் சென்றாா். அப்போது எதிரே வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் , மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநா் ராஜா (35) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.