பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் தெற்கு தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் மாரியப்பன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பைக் அவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.