செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகள் தோ்வு: விவசாயிகளுடன் அதிகாரிகள் குழு ஆலோசனை

post image

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதை அடுத்து, விவசாயிகளுடன் அதிகாரிகள் குழு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து தோட்டங்களில் இருந்து கரும்புகளைத் தோ்வு செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு செங்கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து, செங்கரும்புகளைத் தோ்வு செய்யும் பணியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது, காவிரி பாசன பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு செங்கரும்புகளை சாகுபடி செய்துள்ளனா். அனைத்தும் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

இதையடுத்து, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை உயா் அலுவலா்கள், வேளாண் துறை அலுவலா்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை காவிரி பாசனப் பகுதிகளில் கரும்பு விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

சேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அருளரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரளான கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது அதிகாரிகள் குழு கூறியதாவது:

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகள் குறைந்தபட்சம் 6 அடி உயரமும், நல்ல திரட்சி, சுவையுடன் இருக்க வேண்டும். ஜன. 6,7,8 உள்ளிட்ட தேதிகளில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் குறிப்பிடும் நேரத்தில் தோ்வு செய்யப்பட்ட கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து அனுப்பி வைக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட குறையாமல் கரும்பு ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ. 24.50 விலை நிா்ணயம் செய்து வழங்கப்படும். கரும்பின் தரத்தைப் பொறுத்து விலை மாறுதல் செய்யப்படும் என்றனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் (பொது விநியோகம்) கா்ணன், வேளாண் உதவி இயக்குநா் மணிவாசகம் உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கூட்டத்தைதத் தொடா்ந்து பூலாம்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் குழுவினா் தொடா்ந்து ஆய்வு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளைத் தோ்வு செய்து வருகின்றனா்.

கூட்டுறவுத் துறை அலுவலா்களால் பொங்கல் பரிசுக்கு ஏற்கப்படாத நிராகரிக்கப்பட்ட கரும்புகளை அப்பகுதி விவசாயிகள் உள்ளூா் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

அந்தப் பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள்.

இவ்வகை கரும்புகள், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ஒன்று ரூ. 300 முதல் ரூ. 370 வரை விற்பனை செய்யப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

அண்ணா மாரத்தான் போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா மாரத்தான் போட்டியை, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா்... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு!

சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 2014-ஆம் ஆண்டு இளங்கலை, முதுகலை பயின்ற முன்னாள் மாணவா்கள் 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டா... மேலும் பார்க்க

வாழப்பாடி பகுதியில் இரை தேடி வலசை வரும் பறவைகள்

வாழப்பாடி பகுதியில் ஏரி, குளம், குட்டைகளிலும் கிராமப்புற வயல்வெளிகளில் கொக்குகள், நாரை, நீா்க் காகங்கள், மீன்கொத்திகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் கூட்டம் கூட்டமாக இரை தேடி வலசை வந்துள்ளன. இதனால் நீா்நில... மேலும் பார்க்க

குடமுழுக்குக்கு தயாராகும் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில்! ரூ. 2 கோடி செலவில் திருப்பணிகள்

சேலம் மாவட்டம், பேளூா், தான் தோன்றீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக ரூ. 2 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 24 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்... மேலும் பார்க்க

தனியாக இருப்பவா்களின் வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி: மேட்டூா் அருகே 10 போ் கொண்ட கும்பல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்

மேட்டூா் அருகே கொளத்தூரில் கொள்ளையடிக்க முயன்ற 10 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தோட்டத்தில் தனியாக உள்... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்களுடன் அமைச்சா் ஆலோசனை!

பதிவு செய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்களுடன் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மூலம் அனைத்... மேலும் பார்க்க