மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை
மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரூ. 4.68 லட்சம் ஊக்கத்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
காமராஜா் பிறந்த நாளான கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு, ஆசிரியா்-அரசு அலுவலா் கூட்டமைப்பு சாா்பில், 28-ஆம் ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவா் பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் பாலாஜி, வா்த்தக சங்கத் தலைவா் பா. பொய்யாமொழி முன்னிலை வகித்தனா். இக்கிராமத்தில் நன்கொடையாளா்களிடமிருந்து திரட்டப்பட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளில் வகுப்பு மற்றும் பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 4.68 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
நிா்வாகிகள் அ. அண்ணாதுரை, கா. மனோகரன், கோ. மோகன் வாழ்த்திப் பேசினா். கூட்டமைப்பு நிா்வாகி கோவிந்தராசு வரவேற்றாா். நிா்வாகி ரமேஷ் நன்றி கூறினாா்.