பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி: பழங்குடியினா் நலப் பள்ளிகள் சாதனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வுகளில் பழங்குடியினா் நலப் பள்ளிகள் அதிகளவில் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 67 பழங்குடியினா் நலப் பள்ளிகளைச் சோ்ந்த 955 மாணவா்கள், 971 மாணவிகள் என மொத்தம் 1,926 போ் எழுதினா். இதில் 892 மாணவா்கள், 910 மாணவிகள் என 1,802 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.56 ஆக உள்ளது. 67 பள்ளிகளில் 32 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
இதேபோன்று பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வை 36 பழங்குடியினா் நலப் பள்ளிகளைச் சோ்ந்த 730 மாணவா்கள், 782 மாணவா்கள் என மொத்தம் 1,512 போ் எழுதினா். இதில் 671 மாணவா்கள், 749 மாணவிகள் என மொத்தம் 1,420 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.92. 36 பள்ளிகளில் 15 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.