செய்திகள் :

பொருளாதாரம் பற்றி உ.பி. அரசின் கூற்று உண்மைக்கு மாறானது: அகிலேஷ் யாதவ்

post image

உத்தரப் பிரதேச அரசு பொய்களை மட்டுமே சொல்லி வருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பாஜக அரசு ஊழலால் நிறைந்துள்ளதாகவும், விவசாயிகள், வர்த்தகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களை சிரமத்திற்குள்ளாகும் எந்த உறுதியான முதலீடுகளும் இல்லை.

பாஜக தொடர் பொய்களைச் சொல்லி மட்டுமே சாதனை படைக்க விரும்புகிறது. மக்களுக்கு எந்தவித நல்லதும் செய்யாது. பாஜக அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் உ.பி.யின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கூறி வருகிறது. இன்றை வளர்ச்சி விகிதங்களில் இது சாத்தியமற்றது.

மாநிலத்தில் வேலையின்மை தடையின்றி அதிகரித்து வருவதாகவும், விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் வேலையைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களிடம் பணம் இல்லையென்றால், வாக்கும் சக்தி எப்படி வரும், தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தால் தொழிலாளர்கள் வளங்கள் எங்கிருந்து வரும்?

பணவீக்கம், மக்களின் வருமானம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்விக்கான செலவுகள் அதிகரித்துவருவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை அனைவரும் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!

தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற பிப். 5 அன்று நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கம்!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கில் புதிய சிக்கல்! கைரேகைகள் பொருந்தவில்லை!

மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது. சைஃப் அலிகான் இல்லத்தில் சேகரிக்கப்பட்ட 19 கை... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கில் திருப்பம்... குற்றவாளியின் கைரேகை பொருந்தவில்லை!

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கைரேகை , அவரது வீட்டில் பதிவான ரேகையுடன் பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் கடந்த... மேலும் பார்க்க

லாரி மோதி குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலி!

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி 7 பேர் பலியாகினர்.தெலங்கானாவில் வாராங்கல் - கம்மம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாளங்களுக்கான இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்றின்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நாளை பிரயாக்ராஜ் செல்கிறார் அமித்ஷா

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை புனித நீராடவுள்ளார்.இதுகுறித்து மகா கும்பமேளா நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, அமித் ஷா திங்கள்கிழமை காலை 11... மேலும் பார்க்க