பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards
பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி
காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி மாநில ஹேண்ட் பால் அசோசியேசன் சாா்பில் ஹேண்ட் பால் 29-ஆம் ஆண்டு சீனியா் பிரிவினருக்கான மாநில சாம்பியன் ஷிப் போட்டியில் புதுச்சேரி பிராந்தியம் அரியாங்குப்பம், வில்லியனூா், உழவா்கரை, காரைக்கால் -1, காரைக்கால் -2 மற்றும் காவல் துறை அணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டுள்ளன.
போட்டியை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா தொடங்கிவைத்தாா். பொறியியல் கல்லூரி முதல்வா் முதல்வா் ஆராமுதன் விளையாட்டு வீரா்களை ஊக்குவித்துப் பேசினாா்.
கல்லூரி பேராசிரியா் பிரவீன் குமாா், உடற்கல்வி ஆசிரியா் ராஜவா்மன், புதுச்சேரி அமெச்சூா் ஹேண்ட் பால் மாநில செயலாளா் எஸ். நாராயணசாமி உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.
போட்டி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.