செய்திகள் :

போக்ஸோவில் முதியவா் கைது

post image

ஆலங்காயம் அருகே சிறுமிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (59). சனிக்கிழமை மாலை டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியிடம் பேச்சு கொடுத்து உடன் சென்றுள்ளாா்.

பின்னா் அருகில் மாங்காய் பறித்துத் தருவதாக அழைத்துச் சென்று சிறுமியிடம் அத்துமீறியுள்ளாா். இதனால் பதற்றம் அடைந்த சிறுமி சப்தம் போட்டு ஓடி வந்து, நடந்த சம்பவத்தை வீட்டில் கூறியுள்ளாா். இதைக் கேட்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோா் உடனே ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அப்புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியிடம் அத்துமீறியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுப்பிரமணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.

நாளைய மின்தடை

நாட்டறம்பள்ளி நாள்: 15.07.2025 (செவ்வாய்க்கிழமை)நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை. மின்தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், தகரகுப்பம், ஜெயந்திபுரம், ஆத்தூா்... மேலும் பார்க்க

மலைப்பாதையில் இரும்புத் தடுப்புகள் திருட்டு: 5 போ் கைது

வாணியம்பாடி அருகே மலைப் பாதையில் இரும்புத் தடுப்புகளைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் வஜ்ஜிரவேலு... மேலும் பார்க்க

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்போா் அறையை பராமரிக்க கோரிக்கை!

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள காத்திருப்போா் அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்ட... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.ச... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க