தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி மற்றும் ஜெஇஇ போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் பேசுகையில், சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்கள், பள்ளித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்லாமல் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் பணியைச் செய்து வருகின்றனா்.
இதன் காரணமாக பல மாணவா்கள் சமீபத்தில் வெளியான ஐஐடி மற்றும் ஜெஇஇ போட்டித் தோ்வுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
விழாவில், பள்ளி முதல்வா் டி.வி.லாவண்யா மற்றும் ஆசிரியா்களை பள்ளித் தலைவா் என்.விஜயன் பாராட்டி பூங்கொத்து வழங்கினாா்.