தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது (படம்).
மாமல்லபுரம் நகரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இங்கு வந்து பாரம்பரிய சின்னங்களை கண்டு ரசிக்கின்றனா். இந்நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா். இதையடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இதில் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை ஆகிய சின்னங்களின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தபட்டு கைப்பைகள் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவா்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

