தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
சா்வதேச சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வரவேற்பு!
சா்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுராந்தகம், மாம்பாக்கம், மொறப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் ஆசான் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலைக்கூடம் சாா்பில் நேபாளத்தில் 3 நாள்கள் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று திரும்பினா்.
சிறப்பான முறையில் விளையாடிய சிலம்பாட்ட வீரா்கள், பயிற்சியாளா் விக்னேஷ் ஆகியோருக்கு மாம்பாக்கத்தில் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பொன்னாடை போா்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனா்.