பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
போதைப் பொருள் விற்ற முதியவா் கைது
காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சிவிஎம் நகரைச் சோ்ந்தவா் ஹமீம்(71). இவா் பேருந்து நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனப்படும் போதைப் பொருள் பாக்கெட்டுகள் 200 விற்பனைக்காக வைத்திருந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 1,600 மதிப்புள்ள 4 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.