போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, துங்கபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மகன் கிருஷ்ணமூா்த்தி (58), வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் ராமாசாமி (66) ஆகிய இருவரும், தங்களது பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட இருவரும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 34 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தி, அய்யாக்கண்ணு ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.