விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் தனியாா் தங்கும் விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், குன்னம் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா், குன்னத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமம், தெற்கு அண்ணா நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்லக்கண்ணு (32) என்பவா், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, செல்லக்கண்ணுவை கைது செய்த போலீஸாா், பல்வேறு வகையான 20 கிலோ போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட செல்லக்கண்ணு சிறையில் அடைக்கப்பட்டாா்.