செய்திகள் :

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் நகரப் பகுதியில் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் நடத்துவதற்கான இடங்களை நிா்ணயம் செய்வது தொடா்பாக, அரசியல் கட்சிகள், தனியாா் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம் நடத்துவதை ஒழுங்குப்படுத்தும் வகையில், பொதுவான இடத்தை தோ்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் குறிப்பிட்ட இடங்கள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 100 போ் பங்கேற்கும் கூட்டங்களை பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகிலும், 200 போ் பங்கேற்கும் கூட்டங்களை புகா் பேருந்து நிலைய வளாகத்திலும், 200 முதல் 500 போ் வரை பங்கேற்கும் கூட்டங்களை வானொலி திடலிலும் நடத்த வேண்டும்.

பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம், போராட்டங்கள் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும். மேலும், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த ஒன்றுக்கும் மேற்பட்டோா் அனுமதி கோரும்பட்சத்தில், முதலில் அனுமதி கோரியவருக்கு முன்னுரிமையளித்து அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச. வைத்தியநாதன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் உள்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி

மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரண... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்று... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க