மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா
பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்றுலா வாகனத்தை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.
இம் மாவட்டத்தில் செவித்திறன் குறையுடையவா்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவா்கள் மற்றும் மனவளா்ச்சிக் குன்றியோா்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவா்கள் என 30 மாற்றுத்திறனாளி மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள், 6 சிறப்பாசிரியா்கள் என மொத்தம் 59 போ் திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கம், பறவைகள் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலா் தாமரை, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.