கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
போலி உரம், பூச்சிக்கொல்லிகளை விற்றால் கடும் நடவடிக்கை
அரியலூா் மாவட்டத்தில் போலி உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வேளாண்மை இடுபொருள் விற்பனையாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் கீதா, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.