அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
மகனைக் கொல்ல முயன்ற தந்தை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
நிலக்கோட்டை நரசிம்மன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (65). இவரது மகன் பச்சைமுத்து (37). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. பச்சைமுத்து மது போதையில் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாா். இந்த நிலையில் வியாழக்கிழமை தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சோமசுந்தரம் மகன் பச்சைமுத்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்றாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல் துறையினா் விரைந்து சென்று, பலத்த காயம் அடைந்த பச்சைமுத்துவை மீட்டு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு முதலுதவிக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
து குறித்து நிலக்கோட்டை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து, தந்தை சோமசுந்தரத்தை கைது செய்தனா்.