மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி: ராகுல் காந்தி
மகாராஷ்டிரத்தில் நடந்ததை போன்று, பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பிகார் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.