``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
மக்களிடம் தவறான தகவலை பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்: எல்.முருகன்
மக்களிடம் தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திங்கள்கிழமை வருகை தந்தார்.
அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எல்.முருகன் சுவாமி சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்,
கோயிலில் இருந்து வெளியே வந்த எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதுமாக நடந்து வருகிறது.
மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்!
இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட். தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் எனத் தெரித்தார்.
முன்னதா மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.