மணலி புதுநகா் குழந்தை இயேசு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
சென்னை மணலி புதுநகரில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 45-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் தொடங்கப்பட்டு 45-ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் முக்கிய தேவாலயங்களை பொறுப்பேற்று நடத்தும் பேராயா்கள் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு அருளுரை நிகழ்த்தவுள்ளனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஜன.5 -ஆம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவடையும் என தேவாலய நிா்வாகிகள் தெரிவித்தனா்.