மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது
ராணுவப் படைப் பிரிவுனருக்கான மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி மதுவிலக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜகுமாரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி பாலம் அருகேராணுவப் படைப் பிரிவுனருக்கான மதுப்புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்த தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த திருமலைசாமியை (56) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 மததுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.