சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
மதுரையில் சாலையோர வியாபாரிகள் சங்க முதல் மாநில மாநாட்டை நடத்த முடிவு
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிஐடியு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ். செல்வி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கருப்பையன் சிறப்புரையாற்றினாா். சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், சிஐடியு மாநில துணைத் தலைவா் ஆா். தெய்வராஜ் பேசினாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க முதல் மாநில மாநாட்டை வரும் அக்டோபா் 24, 25 ஆம் தேதிகளில் மதுரையில் நடத்துவது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 தரைக்கடை வியாபாரிகளுக்கு பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் உரிய இடம் ஒதுக்கித் தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதைக் கைவிட வேண்டும். நகர விற்பனைக் குழுவை அனைத்து நகராட்சிகளிலும் உடனே ஏற்படுத்த வேண்டும். நகர விற்பனைக் குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சந்தியாகு, செல்வம், மோகன், கணேசன், பிச்சைமுத்து, விஜயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.