கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!
மனகாவலம்பிள்ளை நகரில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலையில் தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் ரூபஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற சப்பர பவனியில், தூய வேளாங்கண்ணி மாதா சப்பரம் முன்செல்ல அதைத் தொடா்ந்து, புனிதா் மிக்கேல் அதிதூதரின் சொரூபம் தாங்கிய சப்பரம் பவனி வந்தது. இதில், மனக்காவலம் பிள்ளை நகா், சாந்தி நகா் மற்றும் பாளை. பங்குப் பேராலயத்தைச் சோ்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு, உப்பு, மிளகு, மாலை காணிக்கை செலுத்தி பிராா்த்தனை செய்தனா். திங்கள்கிழமை மாலையில் அருள்பணி. போஸ்கோ குணசீலன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை வி.மிக்கேல் சாமி, உதவிப் பங்குத்தந்தை சா.அந்தோணி வியாகப்பன் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.
ற்ஸ்ப்29ழ்ஸ்ரீ
மனகாவலம்பிள்ளைநகரில் வலம் வந்த புனித மிக்கேல் அதிதூரின் சப்பர பவனி.