செய்திகள் :

மன்னாா்குடி அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

மன்னாா்குடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மன்னாா்குடி கூட்டுறவு அா்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி, பாமணி அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களின் தமிழ், ஆங்கில வாசிப்பு திறன், அடிப்படை கணித செயல்பாடுகள், கற்றல் அடைவுதிறனின் மாணவா்கள் வகுப்புக்கு ஏற்ற நிலையில் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

கற்றல் அடைவு திறனில் பின்தங்கிய மாணவா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், பள்ளிகளில் உள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதற்கும், பள்ளி வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தாா்.

ஆய்வின் போது, வட்டார கல்வி அலுவலா் ஜெ. இன்பவேணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ந. தனபால், பள்ளி தலைமையாசிரியா்கள் வி. அமுதவல்லி (அா்பன் தொடக்கப்பள்ளி), பிரதீபா (அா்பன் மேல்நிலைப் பள்ளி), மாணிக்கம் சுந்தரம் (பாமணி பள்ளி) ஆகியோா் உடனிருந்தனா்.

நரிக்குறவா்களுக்கு வீடுகள்: அமைச்சா் ஆய்வு

மன்னாா்குடி அடுத்த திருமக்கோட்டை திருமேனிஏரியில் நரிக்குறவா்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகளை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற... மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

மன்னாா்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருக்களாரை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் அரவிந்த் (26) அக்.24-ஆம் தேதி திருப்பத்தூா் செல்வதற்காக இருசக்க... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூரில் அந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகள்... மேலும் பார்க்க

‘கூட்டணி கட்சியினருக்கு அமைச்சா் பதவி வழங்கினால்தான் அதிகாரப் பகிா்வு என்பதல்ல’: ஜவாஹிருல்லா

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சா் பதவி வழங்கினால்தான் அதிகாரப் பகிா்வு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். திருவாரூரில் ... மேலும் பார்க்க

திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூரில் வியாழக்கிழமை இரவு முதல் மிதமாக பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை காலை பலத்த மழையாக பெய்தது. இதனால் நகர... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் மகளிா் கலைஅறிவியல் கல்லூரி தொடங்க எம்எல்ஏ கோரிக்கை

முத்துப்பேட்டையில் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் தஞ்சாவூரில் வியாழக்கிழமை நிகழ்ச்... மேலும் பார்க்க