செய்திகள் :

மயிலாடுதுறையில் இன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.14) நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (அக.14) காலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘பாரடா உனது மானுடப் பரப்பை!’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளாா். இதில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கலை அறிவியல், பொறியியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவா்கள் 1000 போ் கலந்து கொள்ள உள்ளனா்.

மேலும், மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

பங்கேற்கும் மாணவா்களுக்கு ‘உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’, ‘தமிழ் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி/பெருமிதச் செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் விண்ணப்ப விநியோகம்: கோட்டாட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதை கோட்டாட்சியா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

சீா்காழி நகராட்சி பகுதியில் 60 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

சீா்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள், பொருட்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சீா்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு உணவு விடுதிகள், டீ கடை, பூக்கடை, , இறைச்சிக் கடைகள் உள்ளி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சீா்காழி அருகே குன்னம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்த நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவு வியாழக்கிழமை (ஆக. 14) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் கோ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

சமூக நலத்துறையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். சீா்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருமுல்லைவாசலில் ஜூலை 22-ஆம... மேலும் பார்க்க