டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
சீா்காழி நகராட்சி பகுதியில் 60 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
சீா்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள், பொருட்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சீா்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு உணவு விடுதிகள், டீ கடை, பூக்கடை, , இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் பரப்புரையாளா்கள் பிடாரி மேல வீதி, மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள் சுமாா் 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகளை, நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு அவற்றை அழிக்க பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.