'ADMK - BJP கூட்டணி ஜனவரியில் உடையும்!' - Thirunavukarasar Detailed Interview | ...
மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.10) குடிநீா் விநியோகம் இருக்காது என என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, பிரதான குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் செப்.10-ஆம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூா் நீா் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீரை நகராட்சி மக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.