மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மதுரை தனியாா் மருத்துவமனை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சோ்ந்த ஜீவா மகன் சிவநேசன் (21). பிளம்பரான இவா், மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது, கீழே தவறி விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அதே மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.