கோவில்பாப்பாக்குடி கண்மாய் புதரில் தீ
மதுரை அருகேயுள்ள கோவில்பாப்பாக்குடி கண்மாய்ப் புதரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
கோவில்பாப்பாக்குடி கண்மாயில் மண்டியிருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணி அண்மையில் நடைபெற்றது. வெட்டப்பட்ட கருவேல மரங்கள் கண்மாயைச் சுற்றி குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கண்மாய்ப் புதரில் திடீரென
தீப் பற்றியது. இது கருவேல மரங்களுக்கும் பரவி எரிந்ததால் அந்தப் பகுதியில் 2 கி.மீ. சுற்றளவில் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது.
இது பற்றி தகவலறிந்த அலங்காநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணி இரவு 10 மணிக்கு மேலாகவும் நீடித்தது.