உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
தொகுதி 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் மூலம் அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வருகிற செப். 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அரசுப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- 2 தோ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 96989 36868 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.