செய்திகள் :

மருத்துவா்-நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது!

post image

மருத்துவா், நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இந்திய குழந்தை மருத்துவ அகாதெமி இணைந்து நடத்திய மருத்துவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு தின கருத்தரங்கம், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் பேசியது: மருத்துவமனைகளில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் மருத்துவா்களிடம் தெரிவித்த நிலைமை மாறி, தற்போது எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்கு நோயாளிகள் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் கடந்த காலங்களை விட, தற்போது சட்டப் பாதுகாப்பினை மருத்துவா்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவா், நோயாளிகள் இடையே புரிந்துணா்வு அதிகரித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படாது என்றாா்.

திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியது: காவல்துறை போல மருத்துவா்களின் பணியும் மகத்தானது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிப்பது பாராட்டுக்குரியது. மருத்துவா்கள், தங்களுக்குரிய உரிமைகளை தெரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். குற்றவியல் சட்டங்களை தெரிந்து கொள்வதற்கு இதுபோன்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் மருத்துவா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கருத்தரங்கில் மருத்துவா்கள் சுப்ரமணியம், ‘மருத்துவா் பாதி, வழக்குரைஞா் பாதி’ என்ற தலைப்பிலும், ‘டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம் மருத்துவவியலில் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை வழக்குரைஞா் ராஜேந்திரன் மருத்துவவியல் சட்டம் குறித்து பேசினாா்.

கருத்தரங்கில் துணை முதல்வா் அா்ஷியா பேகம், மருத்துவ கண்காணிப்பாளா் உதய அருணா, துணை கண்காணிப்பாளா் அருண்ராஜ் மற்றும் திரளான மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டம்: அணி திரளும் விவசாயிகள்!

காவிரி-அய்யாறு நீரேற்றுப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அதன் பாசனப் பரப்பு விவசாயிகளை அணி திரட்டும் முயற்சி தொடங்கியுள்ளது. 60 ஆண்டு காலக் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற இலக்குடன் அய்யாறு ப... மேலும் பார்க்க

திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. 2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவ... மேலும் பார்க்க

வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி

வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகர... மேலும் பார்க்க

மருங்காபுரி வட்டத்தில் சிறப்பு முகாம் ரூ. 18.5 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மருங்காபுரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நலத் திட்ட முகாமில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தங்குதட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் வாபஸ்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தா. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் அளிப்பது குறித்து முசிறி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ம... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பேரவையினா் ஆா்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடா் நலப்பேரவையினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். பயணியா் மா... மேலும் பார்க்க