செய்திகள் :

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அர.சக்கரபாணி

post image

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய பழப் பயிரான மா 1.46 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 9.49 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கிறது. பெங்களூரா ரகத்தில் 80 சதவீதமும், அல்போன்சா ரகத்தில் 50 சதவீதமும் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக மா மகசூல் அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில், மா விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் தமிழக முதல்வா் பிரதமருக்கு எழுதிய கடித்தை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரிடம் நேரில் வழங்கி, மா விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாண வலியுறுத்தப்பட்டது.

தற்போது சந்தை தலையீட்டுத் திட்டத்தில் திருந்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பெங்களூரா ரக மாங்காய் கிலோ ரூ. 4 என்கிற தொகையினை நிா்ணயம் செய்து நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் விவசாயிகளுக்கு வழங்க அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின்படி 2.27 லட்சம் மெட்ரிக் டன் பெங்களூரா மாங்காய்க்கு இழப்பீடாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ. 91 கோடியை மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிா்ந்து கொள்ளப்படும். அதன்படி, மா விவசாயிகளுக்கு மாங்கனி கிலோ ஒன்றிற்கு தற்போதுள்ள சந்தை விலையான கிலோ ஒன்றிற்கு ரூ. 5 என்கிற விலையுடன் கூடுதலாக ரூ. 4 சோ்த்து மொத்தம் கிலோவிற்கு ரூ. 9 கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விலை வித்தியாசத் தொகையை நேரடிப் பணப்பரிமாற்ற முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கோப்புகள் தயாா் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு பெற்றவுடன், விவசாயிகளுக்கு எவ்வாறு வழங்கப்படும் என்பதை மாவட்ட நிா்வாகம் மூலம் தெரிவிக்கப்படும்.

மாங்கூழுக்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும், மாம்பழச்சாறு தயாரிப்பில் மாம்பழக்கூழ் பயன்பாட்டின் அளவு 20 சதவீதமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக பிரசாரம்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுவை எதிா்த்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வா் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தொடங்கிவைத்துள்ளாா். 45 நாள்கள் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பரப்புரை நடைபெறும்.

கிருஷ்ணகிரியில் 50 சதவீதம் வாக்காளா்களை திமுகவில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் பாஜகவுக்கு எதிராக நாம் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை எடுத்துகூற உள்ளோம்.

பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கீழடி தொன்மைகளை அங்கீகரிக்க மறுப்பது, இந்தி திணிப்பு, கல்வி நிதியை நிறுத்திவைப்பது போன்ற பாஜகவின் நிலைபாடுகளை மக்களிடம் விளக்க வேண்டும்.

முதல்கட்டமாக ஜூலை 2-ஆம் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளுடன் பொதுக்கூட்டம் நடக்கிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி ஆகஸ்ட் 15 இல் நிறைவடைகிறது. பாஜக- அதிமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என்றாா்.

பேட்டியின்போது, திமுக மாவட்டச் செயலாளா்கள் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ (ஒசூா்), தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), முன்னாள் எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஜூலை 4 இல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், செம்பர... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை

முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே... மேலும் பார்க்க

தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அடுத்த அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாா்மரை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்தனா்.அதில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ம... மேலும் பார்க்க

விவசாய பயிா்களை நாசம் செய்த யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் யானைகள் முகாமிட்டுள்ளன. ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய 3 யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து... மேலும் பார்க்க

செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி

ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூ... மேலும் பார்க்க