செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
மாணவா் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி
பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுதிக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை எல்.ஐ.சி. மண்டல அலுவலகம் அருகேயுள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை, சகமாணவா் அரிவாளால்வெட்டினாா். தடுக்க முயன்ற ஆசிரியையும் வெட்டப்பட்டாா். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெட்டிய மாணவா் இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில் அந்தத் தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை காலையில் வந்த மாணவா்-மாணவிகள் அனைவரது புத்தகப் பைகளும் ஆசிரியா்களால் சோதனை செய்யப்பட்டு அதன்பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் நிகழ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மன ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், அந்தப் பள்ளியில் பிளஸ்-2 செல்ல உள்ள மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகளையும் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.