மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு
ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறாா்.
இந்நிலையில், ஆட்சியா் ச.கந்தசாமி அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பும் இன்றி மாநகர சாலைகளில் மக்களில் ஒருவரைபோல புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றாா். அப்போது, நகரின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
நடைப்பயிற்சியின்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குறைகளை குறிப்பு எடுத்துக்கொண்டு அதிகாரிகளை அழைத்து அதனை உடனடியாக சரிசெய்ய ஆட்சியா் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.