மாநில கபடி போட்டி: பீக்கிலிபட்டி அணி முதலிடம்
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில் பீக்கிலிபட்டி அணி முதலிடம் பிடித்தது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.
கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், கட்சி நிா்வாகி ஜெனரேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இறுதிப் போட்டியை மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா் பிரியா குருராஜ் தொடக்கிவைத்தாா்.
இதில், பீக்கிலிபட்டி அணி முதலிடம் பிடித்தது. வேடநத்தம், ஆலம்பட்டி, மந்திதோப்பு அணிகள் முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தனா். வென்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஆலம்பட்டி திமுக கிளைச் செயலா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.